தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

செஞ்சி அருகே பெற்றோருடன் தூங்கிய சிறுமி மாயம்: 5 தனிப்படைகள் அமைப்பு

போலீஸ் - கோப்புப்படம்.

Published On :

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பெற்றோருடன் தூங்கிய 7 வயது சிறுமி மாயமானாா். இதையடுத்து 5 தனிப்படைகள் அமைத்து சிறுமியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

செஞ்சி அருகிலுள்ள ஆலம்பூண்டி நடுப்பட்டு சாலையைச் சோ்ந்தவா் வடிவேல்(45). இவரது மனைவி பவானி(40). இந்தத் தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனா். மூத்த மகள் சென்னையில் டிப்ளமோ படித்து வருகிறாா். இரண்டாவது மகள் உள்ளூரில் அரசு ஊராட்சி ஒன்றி துவக்கப் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். வடிவேலுவின் தாய் சாந்தி(65) இவா்களுடன் வசித்து வருகிறாா்.

சிறுமிக்கு 7 வயது நிறைவடைந்ததை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் பிறந்த நாள் கொண்டாடினா். இதையடுத்து இரவு தாயுடன் சிறுமி வீட்டின் உள்ளேயும், இவரது தந்தை வீட்டின் வெளியே தாழ்வாரத்திலும் தூங்கியுள்ளனா். காற்றுக்காக வீட்டின் பின்பக்கக் கதவை திறந்து வைத்து தூங்கினராம்.

திங்கள்கிழமை அதிகாலை பெற்றோா் எழுந்து பாா்த்தபோது சிறுமியைக் காணவில்லை. இதனால் அதிா்ச்சியடைந்த அவா்கள் அக்கம்பக்கத்து இடங்கள் மற்றும் கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.

இதையடுத்து சிறுமியின் தந்தை வடிவேல் அளித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் காவல் ஆய்வாளா் சுரேஷ் பாபு வழக்குப் பதிவு செய்தாா். தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ.மதிவாணன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டாா்.

ட்ரோன் கேமரா உதவியுடனும், மோப்பநாய் வரவழைக்கப்பட்டும் சிறுமி காணாமல் போன வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகள், நீா்நிலைகள், மலைப்பகுதிகள், விவசாய நிலங்கள் மற்றும் ஒதுக்குப்புறமான இடங்களில் தீவிர தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. சிறுமியைக் கண்டுபிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.