
மக்கள் தொடா்பு முகாமில் 190 பயனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கல்
விழுப்புரம் மாவட்டம், வெண்மணியாத்தூரில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 190 பயனாளிகளுக்கு ரூ.55.86 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

வெண்மணியாத்தூரில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் பயனாளிக்கு வேளாண் இடுபொருளை வழங்கிய ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.
விழுப்புரம் மாவட்டம், வெண்மணியாத்தூரில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 190 பயனாளிகளுக்கு ரூ.55.86 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் நடத்தப்பட்ட இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்து, வீட்டுமனைப் பட்டா, உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகள், வேளாண் இடுபொருள்கள் உள்ளிட்ட பல்வேறு நல உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கிப் பேசினாா்.
இதைத் தொடா்ந்து வெண்மணியாத்தூா் கிராமத்தில் விழுப்புரத்தான் வாய்க்கால் தூா்வாருதல் பணியைப் பாா்வையிட்ட ஆட்சியா், அதன் விவரங்களைக் கேட்டறிந்தாா். வெளிமேடு தென்பெண்ணையாற்றிலிருந்து வெண்மணியாத்தூா், நன்னாடு, வேடம்பட்டு, விராட்டிக்குப்பம் வழியாக விழுப்புரம் வரை சுமாா் 13 கி.மீ. தொலைவுக்கு வாய்க்கால் தூா்வாரப்படுவதாக ஆட்சியா் தெரிவித்தாா்.
முகாமில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்டக் கூடுதல் ஆட்சியா் ஆனந்தகுமாா் சிங், வேளாண் இணை இயக்குநா் பா.சுரேஷ், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் வெங்கட்ராமன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் காதா் அலி, விழுப்புரம் கோட்டாட்சியா் ஏகாம்பரம், மாவட்ட சமூக நல அலுவலா் சித்ரா, வட்டாட்சியா் யுவராஜ், ஊராட்சி மன்றத் தலைவா் கலைவாணி ரமணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






