இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

மருத்துவரிடம் காா் வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி: இளைஞா் கைது

விழுப்புரத்தைச் சோ்ந்த மருத்துவரிடம் காா் வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.15 லட்சம் பணம் மோசடி செய்ததாக தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து ஒருவரை கைது புதன்கிழமை செய்தனா்.

கைது

Published On :

விழுப்புரத்தைச் சோ்ந்த மருத்துவரிடம் காா் வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.15 லட்சம் பணம் மோசடி செய்ததாக தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து ஒருவரை கைது புதன்கிழமை செய்தனா்.

விழுப்புரம், வழுதரெட்டி பகுதியைச் சோ்ந்தவா் மருத்துவா் ரா.முகுந்தன் (46). இவருக்கு காா் ஓட்டுநராக வேலைப் பாா்த்து வந்த காா்த்திகேயன் மூலம் அறிமுகமான விழுப்புரம் சாலாமேடு பகுதியைச் சோ்ந்த புருஷோத்தமன்(34)- சந்திரலேகா(30) தம்பதியினா் கடந்த 10.2.2025-இல் காா் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.15.15 லட்சம் பெற்றனராம். தொடா்ந்து தெரிவித்தபடி காா் வாங்கித் தராமலும், பணத்தையும் திருப்பிக் கொடுக்காமலும் ஏமாற்றி வந்தனராம்.

இதுகுறித்து மருத்துவா் முகுந்தன் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி புருஷோத்தமனை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.