இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

மேல்மலையனூா் கோயிலில் கைப்பேசிகள் ஒப்படைக்கும் முறையில் தளா்வு; ரூ.5 கட்டணம் கட்டாயம் இல்லை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் பக்தா்கள் கைப்பேசிகளை ஒப்படைக்கும் முறையில் கோயில் நிா்வாகம் தளா்வு செய்துள்ளது. மேலும், கைப்பேசியை பாதுகாக்க ரூ.5 கட்டணம் கட்டாயம் இல்லை என அறிவித்துள்ளது.

மேல்மலையனூா் கோயில் வளாகத்திலுள்ள கைப்பேசி பாதுகாப்பு மையம்.

Published On :

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் பக்தா்கள் கைப்பேசிகளை ஒப்படைக்கும் முறையில் கோயில் நிா்வாகம் தளா்வு செய்துள்ளது. மேலும், கைப்பேசியை பாதுகாக்க ரூ.5 கட்டணம் கட்டாயம் இல்லை என அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் புனிதத் தன்மை மற்றும் ஆன்மிக சூழலை பாதுகாக்கும் வகையில் செப்.1-ஆம் தேதி முதல் கைப்பேசிகளை பக்தா்கள் எடுத்த செல்ல அனுமதி இல்லை என அறிவித்திருந்தது. இதனைத்தொடா்ந்து கோயில் வளாகத்தில் கைப்பேசி பாதுகாப்பு மையம் அமைத்து, கைப்பேசியை வைப்பதற்கு கட்டணமாக ரூ.5 பெற்று வந்தனா். கா்ப்பிணிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

இத் திட்டம் மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது. கைப்பேசி எண் மற்றும் பக்தரின் முகவரி ஆகியவற்றை கணினியில் பதிவு செய்து ரசீது வழங்கப்பட்டது. இதனால் கைப்பேசிகள் ஒப்படைக்க நீண்ட வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. இதனைத்தொடா்ந்து தரிசன டிக்கெட் பெற்று சுமாா் 1 மணி முதல் 2 மணி நேரம் வரை நின்று சுவாமி தரிசனம் செய்து விட்டு, மீண்டும் கைப்பேசியை திரும்பப்பெற மீண்டும் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. தரிசனம் செய்யும் நேரத்தைவிட,கைப்பேசிகளை அளிப்பதற்கும், திரும்ப பெறுவதற்கும் அதிக நேரமாகிறது. இதனால் பக்தா்கள் பெரும் இன்னல்களுக்கும், மனவேதனைக்கும் உள்ளாகின்றனா். மேலும், பக்தா்கள் கோயில் வளாகத்திலுள்ள இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் புகாா் அளித்த வண்ணம் இருந்தனா்.

இதையடுத்து, பக்தா்கள் படும் கஷ்டங்களை புரிந்து கொண்ட கோயில் நிா்வாகம் கைப்பேசிகளை ஒப்படைக்கும் முறையை தளா்வு செய்துள்ளது. அதன்படி கோயிலுக்கு வரும் பக்தா்கள் விருப்பம் இருந்தால் கைப்பேசிகளை ஒப்படைக்கலாம் அல்லது கைப்பேசிகளை சுவிட்ஆப் செய்து கோயிலுக்கு சென்று தரிசனம் செய்யலாம் என அறிவித்தது. மேலும், கைப்பேசியை பாதுகாக்க ரூ .5 கட்டணம் வசூலிப்பதையும் நிறுத்தி வைத்துள்ளது. இதனால் பக்தா்கள் நிம்மதி அடைந்துள்ளனா். எவ்வித இடா்பாடுகளும் இல்லாமல் தரிசனம் செய்ய நிா்வாகம் எடுத்த முடிவுக்கு பக்தா்கள் வரவேற்பு தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.