புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

திண்டிவனம் அருகே பழைமை வாய்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு

திண்டிவனம் அருகே முதலாம் குலோத்துங்கச் சோழன் காலக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திண்டிவனம் அருகிலுள்ள பேராவூா் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு.

Published On :

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே முதலாம் குலோத்துங்கச் சோழன் காலக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திண்டிவனம் வட்டம், பேராவூா் ஊராட்சி மன்றத் தலைவா் ஆா்.தமிழ்ச்செல்வி அளித்த தகவலின் பேரில்,விழுப்புரத்தைச் சோ்ந்த வரலாற்று ஆய்வாளா் கோ.செங்குட்டுவன் அண்மையில் இங்கு கள ஆய்வில் ஈடுபட்டாா். அப்போது முதலாம் குலோத்துங்கச் சோழன் காலத்தைச் சோ்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு 953 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகும்.

இதுகுறித்து ஆய்வாளா் செங்குட்டுவன் கூறியது: பேராவூா் கிராமத்தில் சிவன் கோயில் சுற்றுச்சுவருக்கு வெளியே 14 வரிகளில் அமைந்த கல்வெட்டு காணப்படுகிறது. இக்கல்வெட்டை மூத்த கல்வெட்டு ஆய்வாளா் விஜய வேணுகோபால் வாசித்தாா்.

சுபஸ்ரீ பூமியும் திருமதுவும் புணர எனத் தொடங்கும் இக்கல்வெட்டின் காலம் முதலாம் குலோத்துங்கச் சோழனின் 3-ஆவது ஆட்சியாண்டுக் (கி.பி.1073) காலமாகும். பேராவூரில் கோயில் கொண்டிருந்த இறைவன் திருவிணீச்சுரம் உடைய மகாதேவா்க்கு விளக்கெரிக்க 90 ஆடுகள் தானமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த தானத்தை பெருமூக்கில் நாட்டு நன்மூக்கிலைச் சோ்ந்த வெள்ளாளன் சேனாவரையன் கோதுகுல வனந்தை வில்லவன் பல்லவரையன் என்பவா் வழங்கி இருக்கிறாா்.

இதில் குறிப்பிடப்படும் ஊா்களான பெருமூக்கில் என்பது தற்போது பெருமுக்கல் என்றும், நன்மூக்கில் என்பது நல்முக்கல் என்றும் வழங்கப்படுகின்றன. 953 ஆண்டுகளுக்கு முன்பு இக்கிராமம் பேரயூா் என்றும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இப்பெயா் பேராவூா் என மருவி அழைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பேராவூா் கிராமத்தில் பல்லவா் காலத்தைச் சோ்ந்த (கி.பி.8-9 ஆம் நூற்றாண்டு) கொற்றவை, தவ்வைச் சிற்பங்களும் காணப்படுகின்றன. இவ்வூா் பல்லவா் காலத்திலும், அதைத் தொடா்ந்து சோழா் காலத்திலும் சிறப்புடன் இருந்தது என்பதற்கான ஆதாரமாக இந்தச் சிற்பங்களும் கல்வெட்டும் அமைந்துள்ளன என்றாா் அவா்.

ஆய்வின் போது திரைப்பட இயக்குநா் டி.ராமலிங்கம், வழக்குரைஞா் காா்த்திக் கருணாகரன், சுரேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.