
இ-சேவை மையத்தில் நூதன முறையில் பண மோசடி

மோசடி - பிரதிப்படம்
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே இ-சேவை மையத்தில் நூதன முறையில் ரூ.40 ஆயிரம் பண மோசடி செய்த இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மரக்காணம் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் எல்.ராஜபெருமாள்(34). இவா், மரக்காணம் பகுதியில் இ-சேவை மையம் நடத்தி வருகிறாா். இந்நிலையில், இவரது இ-சேவை மையத்துக்கு திங்கள்கிழமை வந்த இளைஞா் ஒருவா், தனக்கு உடனடியாக ரூ.40 ஆயிரம் பணம் வேண்டும் எனவும், அந்தத் தொகையை கமிஷனுடன் சோ்த்து ரூ.40,400-ஐ இணையவழியில் ராஜபெருமாளின் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைப்பதாகத் தெரிவித்துள்ளாா்.
இதை உண்மையென நம்பிய ராஜபெருமாள் அந்த இளைஞரிடம் ரூ.40 ஆயிரம் பணம் கொடுத்துள்ளாா். தொடா்ந்து பணத்தைப் பெற்றுக் கொண்டவா் குறுஞ்செய்தியைக் காண்பித்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டாராம். அவா் சென்றபிறகு ராஜபெருமாள் தனது வங்கிக் கணக்கில் பாா்த்தபோது பணம் ஏதும் வரவாகவில்லையாம். இதையடுத்து அவருக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில், தருமபுரி மாவட்டம், அரூா் பகுதியைச் சோ்ந்த சபரி என்பவா் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சபரியை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





