ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஆதரவாக அவரது 8 வயது மகள் பிரசாரம்

விராமலிமலை பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் விஜயபாஸ்கரை ஆதரித்து அவரது எட்டு வயது மகள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

News image
Updated On :5 மே 2016, 8:59 am

சி. உதயகுமார்

விராலிமலை: விராமலிமலை பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் விஜயபாஸ்கரை ஆதரித்து அவரது எட்டு வயது மகள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

விராலிமலை சட்டப் பேரவைத் தொகுதியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அதிமுக வேட்பாளராக மீண்டும் போட்டியிடுகிறார்.

அவரை ஆதரித்து அவரது எட்டு வயது மகள் பிரியதர்ஷினி விராலிமலை தொகுதி முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார்.

அதிமுக வின் சாதனைகளை விளக்கிக் கூறும் பிரியதர்ஷினி, கடந்த 5 ஆண்டுகளில் சட்டப் பேரவை உறுப்பினராக தனது தந்தை விராலிமலை தொகுதியில் நிறைவேற்றிய திட்டங்களை எல்லாம் வரிசையாக கூறி வாக்காளர்களை கவர்ந்து வருகிறார்.

ஐந்தாம் வகுப்பு பயிலும் பிரியதர்ஷினி தனது மழலை மொழியில் தந்தைக்கு வாக்கு கேட்டு பேசுவதை அப்பகுதி வாக்காளர்கள் ஆர்வமுடன் ரசிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.