பெங்களூரு

மகளிர் விடுதியில் அத்துமீறல்: இளைஞர் கைது

தினமணி

மகளிர் விடுதியில் நுழைந்து மாணவிகளின் உடையைத் திருடி, அதை உடுத்திக் கொண்டு இரவு முழுவதும் விடுதியில் படுத்து உறங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
 பெங்களூரில் அரண்மனை சாலையில் மகாராணி மகளிர் கல்லூரி மாணவிகள் தங்கும் அரசு மகளிர் விடுதி உள்ளது. இந்த விடுதியில் மாடியில் உலர்த்தப்படும் உள்ளாடைகள் காணாமல் போவதாக மாணவிகள் புகார் தெரிவித்தனர்.
 இதைத் தொடர்ந்து, 2016, செப்.19-ஆம் தேதி விடுதி காப்பாளர் சுமித்ராதேவி ஹைகிரவுண்ட்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியாமல் போலீஸார் திணறினர்.
 இந்த நிலையில், அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை காவல் நிலையத்தில் விடுதிக் காப்பாளர் ஒப்படைத்தார். அதில் ஒரு இளைஞர் நிர்வாணமாக விடுதிக்குள் நுழைந்து மாணவிகளின் உள்ளாடைகளைத் திருடி,அதை அணிந்து கொண்டு சென்றார். மேலும், மாணவிகளின் உடையுடன் விடுதியில் தங்கியிருந்த இளைஞரை மாணவிகள் அடித்து விரட்டியுள்ளனர். இதையடுத்து, அக் காட்சியில் பதிவான இளைஞர் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள குதிரைப்பந்தய சங்கத்தில் குதிரைப் பராமரிப்பாளராகப் பணியாற்றிவரும் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த அபுதலீம் என்பது தெரிய வந்தது.
 இதையடுத்து, அந்த இளைஞரை புதன்கிழமை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் தூக்கத்தில் நடக்கும் பழக்கம் தனக்கிருப்பதாக அபுதலீம் கூறியுள்ளார். மேலும், அவரது சகோதரர் நவாஸ் கூறுகையில், சிறு வயது முதலே பெண்களின் உள்ளாடைகளை அணியும் வழக்கம் அபுதலீமிடம் இருந்ததாகவும், திருமணத்திற்குப் பிறகும் அந்த பழக்கம் அவரிடம் இருந்ததாகவும், அதை ஒரு நோய் எனக் கருதி உறவினர்கள் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர் என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீ கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம்

மீன்கள் விலை உயா்வு: விற்பனையும் அமோகம்

கெளரவிப்பு...

நாட்டறம்பள்ளி வரதராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேம்

SCROLL FOR NEXT