பெங்களூரு

ஆன்மிகப் பயணம்: சிறப்பு பேருந்துகள் இயக்கம்

DIN

கர்நாடகத்தில் உள்ள புகழ்பெற்ற ஆன்மிகத் தலங்களுக்கு அழைத்துச் செல்ல மாநில சுற்றுலாத் துறை சிறப்பு பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டுள்ளன.
இதுகுறித்து கர்நாடக மாநில சுற்றுலாக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கர்நாடக மக்கள், மாநிலத்தில் உள்ள ஆன்மிகத்தலங்களுக்கு செல்வதற்காக  புனிதப்பயணம் என்ற திட்டத்தின்கீழ் சிறப்பு சலுகைக் கட்டண வசதியுடன் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இத் திட்டத்தின்கீழ் பேருந்தில் பயணிக்கும் அனைவருக்கும் 25 சத சிறப்புச் சலுகையுடன் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குளிரூட்டப்பட்ட சொகுசுப் பேருந்தில் புனிதப்பயணம் அழைத்து செல்லப்படும். தரமான, நடுத்தரமான உணவகங்களில் தங்கவைக்கப்படுவர்.
ஆன்மிகத்தலங்கள் குறித்து முழுமையான விளக்கம் அளிக்கப்படும். ஒருசில கோயில்களில் விரைவு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாள்கள் பயணமாக திருப்பதிக்குச் செல்ல ரூ.1,635, பேளூரு, ஹளேபீடு, சிரவணபெலகோலாவுக்கு ரூ.940,  நான்கு நாள்கள் பயணமாக  மந்த்ராலயா, ஹம்பி, ஹொசபேட்டைக்குச் செல்ல ரூ.2,765, சிக்கதிருப்பதி, கோட்டிலிங்கேஸ்வரா, கைவாராவுக்குச் செல்ல கட்டணமாக ரூ.900 செலுத்த வேண்டும்.
மலைமாதேஸ்வரா மலைக்கோயில், சுத்தூர், நஞ்சன்கூடுவுக்குச் செல்ல ரூ.1,425, எடியூர், ஆதிசுன்சுனகிரி, சிகந்தூர், கோகர்ணா, பனவாசி, சிரசி, சொந்தாவுக்குச் செல்ல ரூ.3,565 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோன்றதொரு சலுகைக் கட்டனத்துடன் ஷிரடி, நாசிக், ஐந்து ஜோதிர்லிங்கங்கள், சனிசிங்காபுரா, கொல்லாபூர், அஜந்தா, எல்லோரா, அவுரங்காபாத், மதுரை, குருவாயூர், பழனி, கூடலசங்கமா, ஆலமட்டி, விஜாபுரா, கானகபுரா, சன்னதி, சவதத்தி எல்லம்மா, பாபாபுடனகிரி, பசவனபாகேவாடி, பசவகல்யாண், கலபுர்கி, பீதர் ஆகிய இடங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு என்ற இணையதளத்திலோ அல்லது 080-43344334, 8970650070 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT