பெங்களூரு

காங்கிரஸ் நிர்வாகிகளின் வீடுகளில் வருமான வரித் துறையினர் சோதனை

DIN

காங்கிரஸ் எம்எல்ஏ  உள்ளிட்ட  கட்சியின் நிர்வாகிகளின் வீடுகளில் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பெங்களூரு ஊரகத்தில் உள்ள ஆனேக்கல் தொகுதியின் எம்எல்ஏ சிவண்ணா.  ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிடப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் சிவண்ணாவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில் திங்கள்கிழமை காலை அவரது வீட்டில் வருமான வரித் துறையின் சோதனையில் ஈடுபட்டனர். அதில், பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதவிர, சிக்மகளூரில் காங்கிரஸ் கட்சியின் வட்டாரத் தலைவர் சுதீர்குமார் முரளி, நிர்வாகி சுப்பிரமணிய ஷெட்டி உள்ளிட்ட நிர்வாகிகளின் வீடுகளிலும் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். 
தேர்தல் நேரத்தில் நடத்தப்பட்டுள்ள இந்தச் சோதனையை மத்திய அரசின் பழிவாங்கும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT