பெங்களூரு

பிப். 28-இல் அறிவியல் பயிலரங்கம்

DIN

பெங்களூரில் உள்ள ஜவாகர்லால் நேரு கோளரங்கத்தில் பிப். 28-ஆம் தேதி அறிவியல் பயிலரங்கம் நடைபெறுகிறது.
இதுகுறித்து ஜவாகர்லால் நேரு கோளரங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பெங்களூரு, ஹைகிரவுண்ட்ஸ், டி.செளடையா சாலையில் அமைந்துள்ள ஜவாகர்லால் நேரு கோளரங்கத்தில் பிப். 28-ஆம் தேதி காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை அறிவியல் பயிலரங்கம் நடைபெறுகிறது.
"காகிதங்கள் வழியே வானியல்' என்ற தலைப்பில் நடைபெறும் இந்த பயிலரங்கத்தில், கணிதம் மற்றும் அறிவியலில் அதீத ஈடுபாடுள்ள 8-ஆம் வகுப்புக்கு மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்துகொள்ளலாம். முதலில் வருவோருக்கு முதலில் வாய்ப்பு என்ற அடிப்படையில் பயிலரங்கில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு ‌w‌w‌w.‌t​a‌r​a‌l​a‌y​a.‌o‌r‌g என்ற இணையதளம் அல்லது 080-22379725 என்ற தொலைபேசி எண்ணில் அணுகலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT