முகப்பு
பெங்களூரு

அமமுக சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டம்

கர்நாடகத்தில் அமமுக சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

Updated On : 25 பிப்ரவரி 2019, 8:21 am IST
பகிர்:

கர்நாடகத்தில் அமமுக சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
இது குறித்து அக் கட்சியின் மாநிலச் செயலாளர் வா.புகழேந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:  மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாள் விழா கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டது.  அக் கட்சியின் மாநிலச் செயலாளர் வா.புகழேந்தி தலைமையில், பெங்களூரு சுதந்திரா நகரிலுள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து,  பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.  
நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநில பொருளாளர் ராஜேந்திரன்,  மாநில துணைச் செயலாளர் பரமேஸ்வரி பரமேஸ்வரன்,  ராஜூ,  மாவட்டச் செயலாளர் குமார்,  ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலாளர் வெங்கடேஷ்,  அருள் மற்றும் நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.