பெங்களூரு

ஆகும்பே வனப் பகுதியில் சாலை சீரமைப்பு பணி நடைபெறுவதையொட்டி வாகனங்கள் செல்லத் தடை

DIN

சிவமொக்கா மாவட்டம்,  ஆகும்பே வனப் பகுதியில் மலை சரிவு ஏற்பட்டுள்ள சாலைகள் பழுதடைந்துள்ளதால்,  மார்ச் 1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி, வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 கர்நாடக மாநிலம்,  சிவமொக்கா மாவட்டம் ஆகும்பே வனப் பகுதியில் கடந்த ஜூலை 10 மற்றும் 13-ஆம் தேதிகளில் பெய்த கன மழையால் மலைச் சரிவு ஏற்பட்டதால்,  தீர்த்தள்ளி, உடுப்பி இடையிலான சாலை பல்வேறு இடங்களில் சேதமடைந்துள்ளது.  சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணி மார்ச் 1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறுவதால்,  அச் சாலையில் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  மேலும்,  லகு ரக வாகனங்கள்,  இரு சக்கர வாகனங்கள் தீர்த்தள்ளி,  கொப்பா, சிருங்கேரி, மாலாகாட்,  கார்கல் வழியாக உடுப்பிக்குச் செல்லலாம்.  அதேபோல,  கனரக வாகனங்கள், டேங்கர் லாரிகள் தீர்த்தள்ளி,  மாசிகட்டே, ஹொசங்கடி, சித்தாபுரா, குந்தாபுரா வழியாக உடுப்பிக்குச் செல்லலாம் என மாவட்ட  ஆட்சியர் தயானந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

SCROLL FOR NEXT