பெங்களூரு

நிர்மலா சீதாராமனின் பெங்களூரு வருகை ரத்து

DIN

பெங்களூருக்கு புதன்கிழமை வருவதாக இருந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பயணம் ரத்து செய்யப்பட்டது.
பெங்களூரில் கடந்தசில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற விமானத் தொழில் கண்காட்சியில் கலந்துகொண்ட மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பெங்களூரில் உள்ள மத்திய பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான நிலங்களை பெங்களூரு மாநகராட்சியுடன் இணைந்து கைமாற்றிக் கொள்ள ஒப்பந்தம் செய்துகொள்ள முடிவுசெய்திருந்தார். 
பெங்களூரு மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தை மத்திய பாதுகாப்புத் துறையும், மத்திய பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான நிலத்தை பெங்களூரு மாநகராட்சிக்கும் வழங்க, நிலம் கைமாறுதல் ஒப்பந்தம்செய்துகொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நில கைமாறுதல் ஒப்பந்தத்தை பெங்களூரில் புதன்கிழமை செய்துகொள்ள முடிவுசெய்யப்பட்டு, அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மத்திய பாதுகாப்புத்துறைஅமைச்சர் நிர்மலா சீதாராமனும் வருகைதருவதாக ஒப்புக் கொண்டிருந்தார். 
இதேபோல, பெங்களூரில் நடைபெற்றுவரும் ஆசியான் தொழில்வர்த்தக மாநாட்டிலும் கலந்துகொள்ள மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டமிட்டிருந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் உருவானதை தொடர்ந்து, நிர்மலா சீதாராமனின் பெங்களூரு பயணம் கடைசி நேரத்தில் திடீரென ரத்து செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடாவில் 3 இந்தியா்கள் கைது

18 மாவட்ட கல்வி அலுவலா்களின் நியமனம் ரத்து: உயா்நீதிமன்றம்

மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை கண்டறிய ஒத்திகை

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

SCROLL FOR NEXT