பெங்களூரு

ஜன. 21 முதல் செல்லிடப்பேசிபழுதுநீக்கும் பயிற்சி

DIN


பெங்களூரில் ஜன. 21-ஆம் தேதி முதல் செல்லிடப்பேசி பழுதுநீக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து பல்ஸ் ஸ்டோன் தொழிலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பல்ஸ் ஸ்டோன் தொழிலகம் நிறுவனத்தில் மத்திய அரசு நிதியுதவியுடன் 4 வாரகால செல்லிடப்பேசி பழுதுநீக்கும் வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி ஜன. 21-ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.
இந்த பயிற்சிக் காலத்தில் செல்லிடப்பேசி மென்பொருள், வன்பொருள் பழுதுநீக்குதல் போன்றவை கற்றுத்தரப்படும். ஸ்மார்ட்போன் உள்ளிட்ட அனைத்து செல்லிடப்பேசிகளின் பழுதையும் நீக்குவது கற்பிக்கப்படும். வெளியூர் மாணவர்களுக்கு இலவச தங்கும்விடுதி வழங்கப்படுகிறது. பயிற்சி மாணவர்களுக்கு இலவசமாக பாடநூல்கள், கருவிகள் பெட்டி, மென்பொருள்கள் வழங்கப்படும்.
இப்பயிற்சியில் சேர பியூசி தேர்ச்சி அல்லது தோல்வி, பட்டயம், வேலைவாய்ப்பு பயிற்சி பெற்றிருத்தல் அவசியம். 
இப்பயிற்சியில் சேர ஜன. 19-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9535142052, 9845102923 என்ற செல்லிடப்பேசி எண்களில் அணுகலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழா

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: காங்கிரஸ் விளக்கம்

ஒடிஸா: ஆளும் கட்சி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்!

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

SCROLL FOR NEXT