பெங்களூரு

பெங்களூரில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

DIN

பெங்களூரில் மார்ச் 8-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
தேசிய வேலை சேவைகள் திட்டத்தின் கீழ் தொழிற்பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புத் துறை, மாவட்ட வேலை வாய்ப்பு முகமை மற்றும் தனியார் நிறுவனங்களின் சார்பில் பெங்களூரு, ஒசூர் சாலையில் பொம்மசந்திரா தொழில்பேட்டையில் உள்ள பிடிஎல் நிறுவன வளாகத்தில் மார்ச் 8-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
முகாமில் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம்சாராதவை, நிதி, ஆட்டோ மொபைல், மெக்கானிக்கல் துறைகளைச் சார்ந்த 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.
முகாமில் எஸ்எஸ்எல்சி, பியூசி, ஐடிஐ, பட்டயம் படித்தோர், இளநிலை, முதுநிலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், மாற்றுத் திறனாளிகள் கலந்து கொள்ளலாம்.
புதியவர்கள் முதல் ஓராண்டு வேலை அனுபவம் கொண்டவர்கள் பங்கேற்கலாம். வேலை தேடி வருவோர் தன்விவரக் குறிப்பு 10 படிகள், கடவுச்சீட்டு அளவு புகைப்படம் 10 படிகள், அசல் மற்றும் நகல் கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை, பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, கடவுச்சீட்டு போன்ற அடையாள அட்டைகளின் நகல்களை கொண்டுவர வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 9036100054, 9036100064, 9036100065, 9036100069 என்ற செல்லிடப்பேசி எண்கள் அல்லது  w‌w‌w.‌n​c‌s.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதளத்தை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீ விபத்தில் பாதித்தோருக்கு நிவாரண உதவி

பாஜக கூட்டணியில் உத்தவ் தாக்கரே இணைவாா்: மகாராஷ்டிர எம்எல்ஏ கருத்து

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வாக்கு கணிப்புகளுக்கு மாறாகத் தோ்தல் முடிவுகள் இருக்கும்: சோனியா காந்தி

ஆம்பூரில்...

SCROLL FOR NEXT