பெங்களூரு

ஏப். 12 முதல் குழந்தைகளுக்கு கோடை கால பயிற்சி

DIN


குழந்தைகளின் படைப்பாக்கத் திறனை மேம்படுத்துவதற்கான கோடை கால பயிற்சி ஏப். 12-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இதுகுறித்து பாலபவன் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெங்களூரு, கப்பன் பூங்காவில் உள்ள பாலபவன் சார்பில், வரும் ஏப். 12 முதல் மே 12-ஆம் தேதி வரையில் 5 முதல் 16 வயது வரை உள்ள குழந்தைகளின் படைப்பாக்கத் திறனை மேம்படுத்துவதற்காக கோடை கால பயிற்சி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த முகாமில் ஓவியம், கைவினை, பின்னல் வேலை, மண் பொம்மை, நடனம், இசை, கராத்தே, யோகா, நாடகம், நாட்டுப்புறக் கலை, கயிறு/பாறை ஏறுதல், சதுரங்கம், கேரம்போர்டு, கீபோர்டு, தபலா, கிடார், ஹார்மோனியம், பத்திக், குப்பையில் இருந்து கைவினை, மருதாணியிடுதல், எழுத்துக் கலை, பாரம்பரியக் கலை, அலுமினிய தகடு வேலைப்பாடுகள், மர வேலைப்பாடுகள், ஏரோமாடலிங், புகைப்படக்கலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் தகுதியானவர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது.
கப்பன் பூங்காவில் உள்ள பாலபவன், ஜெயநகர், ராஜாஜி நகர், ஜீவன் பீமா நகர், கோல்ஸ் பூங்காவில் உள்ள மினி பாலபவனில் சிறப்பு முகாம் நடத்தப்படும். இந்த முகாமில் பங்கேற்க ஆர்வமுள்ள குழந்தைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முதலில் வருவோருக்கு முதலில் இடம் என்ற அடிப்படையில் முகாமில் குழந்தைகள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு பாலபவன் சங்கம், கப்பன் பூங்கா, பெங்களூரு என்ற முகவரி அல்லது 080-22861423,22864189 என்ற தொலைபேசி அல்லது  ள்ங்ஸ்ரீஹ்க்ஷஹப்க்ஷட்ஹஸ்ஹய்.க்ஷய்ஞ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் என்ற மின்னஞ்சலில் அணுகலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT