பெங்களூரு

மருத்துவமனைகளில்தொழில்நுட்பத் தேவை பெருகி வருகிறது

DIN


 மருத்துவமனைகளில் தொழில்நுட்பத் தேவை பெருகி வருகிறது என ஆசிய ஆராய்ச்சி மற்றும் திறன்மாற்றல் மையத்தின் தலைவர் டாக்டர் ஹேமா திவாகர் தெரிவித்தார்.
கர்நாடகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெண்களின் மகப்பேறு மருத்துவத்தின் தரத்தை தொழில்நுட்பத்தின் உதவியுடன் மேம்படுத்தும் நோக்கில், கர்நாடக அரசுடன் ஆசிய ஆராய்ச்சி மற்றும் திறன்மாற்றல் மையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, செய்தியாளர்களிடம் மையத்தின் டாக்டர் ஹேமா திவாகர் கூறியது: பெண்கள் சார்ந்த மருத்துவத்தை ஆராய்ச்சி செய்து வரும் எங்கள் மையம், அதில் திறன்சார்ந்த புதுமையான அம்சங்களை கண்டறிந்துள்ளது.
பெண்களின் உடல்நிலையை மேம்படுத்தும் நோக்கில், மருத்துவமனைகளில் தொழில்நுட்பத் தேவை பெருகி வருகிறது. தொழில்நுட்ப ரீதியான பயிற்சி, சேவைகளை வழங்குவதற்காக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளோம். இது மகப்பேறு மருத்துவத்தில் பெரிய அளவிலான மாற்றத்துக்கு வழிவகுக்கும். மேலும், இச்சேவை கர்நாடகம் தவிர, ஜார்கண்ட், மகாராஷ்டிரம், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தானில் விரிவுப்படுத்தி வருகிறோம் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

SCROLL FOR NEXT