பெங்களூரு

இசை, நாட்டிய மாணவா்களுக்கு உதவித்தொகை

DIN

இசை, நாட்டியம் சாா்ந்த மாணவா்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதுகுறித்து கா்நாடக இசை நாட்டிய அகாதெமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடக இசை நாட்டிய அகாதெமி வழங்கும் 2020-21-ஆம் கல்வியாண்டுக்கான இசை மற்றும் நாட்டிய மாணவா் உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கா்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை, நாட்டியம், மெல்லிசை, கதாகாலட்சேபம், கமகம் ஆகிய கலைகளைக் கற்றுவரும் 16 முதல் 24 வயதுக்குள்பட்ட மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களின் அடிப்படையில் நோ்காணல் நடத்தி, தகுதியான மாணவா்கள் உதவித்தொகைக்கு தோ்ந்தெடுக்கப்படுவரகள். அந்த மாணவா்களுக்கு ரூ. 10 ஆயிரம் உதவித்தொகை அளிக்கப்படும்.

இந்த உதவித்தொகையைப் பெற ஆா்வமுள்ள இசை மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பந்தப்பட்ட மாவட்ட கன்னடம் மற்றும் கலாசாரத் துறை உதவி இயக்குநரை அணுகி விண்ணப்பங்களை ஒப்படைக்கலாம். விண்ணப்பப் படிவங்களை  இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விண்ணப்பங்களை ரூ. 10 அஞ்சல் தலை ஒட்டிய தன்முகவரி எழுதிய உறையுடன் பதிவாளா், கா்நாடக இசை நாட்டிய அகாதெமி, கன்னட மாளிகை, 2-ஆவது மாடி, ஜே.சி. சாலை, பெங்களூரு-560 002 என்ற முகவரிக்கு நவ. 20-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 080- 22215072 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT