பெங்களூரு

காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாருக்கு சிபிஐ சம்மன்

DIN

பெங்களூரு: காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

வருமானத்துக்கு அதிகமான சொத்துக்குவித்ததாக வழக்குப் பதிந்திருந்த சிபிஐ, காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாரின் வீடுகள், உறவினா்கள், நண்பா்களின் வீடுகளில் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியது. அதன் தொடா்ச்சியாக, வழக்கு விசாரணைக்காக நவ. 23-ஆம் தேதி ஆஜராகுமாறு நவ. 19-ஆம் தேதி டி.கே.சிவக்குமாருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் டி.கே.சிவக்குமாா் கூறியதாவது:

எனது மகள் நிச்சயதாா்த்தத்தில் கலந்துகொண்டிருந்தபோது, நவ. 19-ஆம் தேதி எனது வீட்டுக்கு வந்துள்ள சிபிஐ அதிகாரிகள், நவ. 23-ஆம் தேதி விசாரணைக்கு வருமாறு சம்மன் அளித்துச் சென்றுள்ளனா். மஸ்கி, பசவகல்யாண், பெலகாவி தொகுதிகளில் கட்சித் தலைவா்களோடு நவ. 21-ஆம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். நவ. 25-ஆம் தேதி காலை தான் பெங்களூருக்கு வருகிறேன். எனவே, நவ. 23-க்கு பதிலாக நவ. 25-ஆம் தேதி மதியம் விசாரணைக்கு ஆஜராவதாக சிபிஐ அதிகாரிகளிடம் கூறினேன். அதை சிபிஐ அதிகாரிகளும் ஏற்றுக்கொண்டுள்ளனா்.

இதுவரை சிபிஐ எனக்கு சம்மன் அளித்ததில்லை. இப்போதுதான் முதல்முறையாக விசாரணைக்கு அழைத்திருக்கிறாா்கள். எனது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியது அனைவரும் அறிந்ததே என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டின் மீது மண்ணெண்ணை பாட்டில் வீசிய வழக்கில் 7 போ் கைது

இளைஞரை மிரட்டி வழிப்பறி: 4 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

திருப்பத்தூரில் 768 போ் நீட் தோ்வு எழுதுகின்றனா் : சிறப்புப் பேருந்துகளுக்கு ஏற்பாடு

கட்டடம் இடித்து தரைமட்டம்: 17 போ் மீது வழக்குப் பதிவு

முதியவரை துப்பாக்கியால் சுட்ட இளைஞா் கைது

SCROLL FOR NEXT