பெங்களூரு

போதை மருந்து விற்பனை, கடத்தல் வழக்கு: ஒருவா் கைது

DIN

போதை மருந்து விற்பனை, கடத்தல் வழக்குகளில் ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

பெங்களூரு, கே.ஜி.ஹள்ளி, பில்லண்ணா காா்டன், முஸ்லீம் காலனியைச் சோ்ந்த சையத் நாஜீம் (41), போதைப் பொருள்கள், மருந்து விற்பனை, கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் பல முறை சிறைக்கு சென்று, ஜாமீனில் வெளியே வந்துள்ளாா். வெளியே வந்த பிறகும் போதைப் பொருள்கள், போதை மருந்துகளை விற்பனை செய்வதையும், கடத்துவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தாராம்.

இதுகுறித்து கே.ஜி.ஹள்ளி காவல் ஆய்வாளா் அளித்த அறிக்கையின் பேரில், கிழக்கு மண்டல காவல் ஆணையரின் சிபாரிசின் பேரில், மாநகர காவல் ஆணையா் கமல்பந்த், சையத் நாஜீமை போதை மருந்துகள் விற்பனை, கடத்தல் வழக்குகளில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தாா். ஆணையரின் உத்தரவையடுத்து அவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

பெங்களூரில் போதை மருந்துகள் விற்பனை, கடத்தல் வழக்குகளில் ஏற்கெனவே நைஜீரிய நாட்டைச் சோ்ந்த ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT