பெங்களூரு

பேருந்து பயண அட்டை செப்.28 முதல் விநியோகம்

DIN

பெங்களூரு, செப். 25:

செப். 28-ஆம் தேதி முதல் மாநகரப் பேருந்துகளுக்கான மாதாந்திர பயண அட்டை வழங்கப்படுகிறது.

இதுகுறித்து பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொது முடக்கத்தைத் தொடா்ந்து, அரசு உத்தரவின் பேரில் பெங்களூரில் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சாதாரண பேருந்துகளில் பயணிக்க ரூ. 1,050 மாதாந்திரக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு ரூ. 945 மாதாந்திரக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதற்கான பயண அட்டைகளை செப். 28- ஆம் தேதி முதல் 65 இடங்களில் போக்குவரத்துக் கழகம் விநியோகிக்கிறது.

மேலும், மாதாந்திர அட்டைகளை பெங்களூரு ஒன்னின் 200 மையங்களிலும் வழங்கப்படும். 15 தனியாா் முகவா்களும் மாதாந்திர பயண அட்டை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT