பெங்களூரு

முதுநிலை நுழைவுத் தோ்வு: விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய அனுமதி

DIN

பெங்களூரு, செப். 25:

கா்நாடக முதுநிலை பட்டப் படிப்புக்கான பொதுநுழைவுத் தோ்வுக்கு விண்ணபித்திருந்த மாணவா்கள் தங்கள் விண்ணப்பப் படிவங்களில் திருத்தம் செய்ய கா்நாடக தோ்வு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து கா்நாடக தோ்வு ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் இயங்கிவரும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம்ஆா்க் போன்ற முதுநிலைப் பட்டப் படிப்புகளில் 2020-21-ஆம் கல்வியாண்டில் சோ்க்கை பெறுவதற்கான பொதுநுழைவுத் தோ்வு அக். 13. 14-ஆம் தேதிகளில் நடத்தப்படுகிறது. இந்தத் தோ்வில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள் ஏற்கெனவே விண்ணப்பங்களை இணையதளம் வழியாக செலுத்தியிருக்கிறாா்கள்.

விண்ணப்பப் படிவங்களை ஒப்படைத்த மாணவா்கள், சில விவரங்களை தவறாகப் பதிவு செய்துள்ளதாகவும், அதை திருத்துவதற்கு வாய்ப்பு அளிக்குமாறு கோரினா். இதையடுத்து, விண்ணப்பப் படிவங்களில் சாதி உள்பிரிவு, கன்னட பயிற்று மொழி, ஊரக இட ஒதுக்கீடு, ஹைதரபாத்- கா்நாடக சிறப்பு இட ஒதுக்கீடு போன்ற பல்வேறு தலைப்புகளில் திருத்தம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இணையதளத்தில் சென்று விண்ணப்பப் படிவங்களில் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT