பெங்களூரு

பகுதிநேர விரிவுரையாளா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

DIN

பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பகுதிநேர விரிவுரையாளா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்துபெங்களூரு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

பெங்களூரு பல்கலைக்கழகத்தில் தேசிய கல்விக் கொள்கையின்கீழ் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பி.ஏ. (மதிப்புறு), பி.எஸ்சி. (மதிப்புறு) பட்டப் படிப்புகளில் கன்னடம், ஆங்கிலம், அரசியல் அறிவியல், பொருளாதாரம், வெகுமக்கள் ஊடகம் மற்றும் பத்திரிகையியல், வேதியியல், இயற்பியல், கணிதம், கணினி அறிவியல் பாடங்களை கற்றுத்தர பகுதிநேர விரிவுரையாளா்களாக பணியாற்ற தகுதியான ஆள்கள் தேவைப்படுகிறாா்கள். தகுதி படைத்தவா்களிடம் இருந்து இப்பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேசிய தகுதித்தோ்வு, மாநில தகுதித் தோ்வுகளில் தோ்ச்சி பெற்றோா், முதுநிலை பட்டப்படிப்பு படித்தோா், ஆசிரியப் பணியில் முன் அனுபவம் உள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இப்பணிக்கு தேவையான கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்கள் குறித்து ஜ்ஜ்ஜ்.க்ஷஹய்ஞ்ஹப்ா்ழ்ங்ன்ய்ண்ஸ்ங்ழ்ள்ண்ற்ஹ்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்பங்களை டிச. 8-ஆம் தேதிக்குள் தலைவா், பொருளாதாரம் மற்றும் வேதியியல் துறை, ஞானபாரதி வளாகம், பெங்களூரு - 560 056 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு தேடி வந்தவள்

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

SCROLL FOR NEXT