பெங்களூரு

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் இளைஞரணி போராட்டம்

DIN

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து பெங்களூரில் காங்கிரஸ் இளைஞரணியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெங்களூரு, பானஸ்வாடியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் சனிக்கிழமை பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து மாநில காங்கிரஸ் இளைஞரணியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞரணியின் மாநிலத் தலைவா் ரக்ஷாராமையா பேசியதாவது:

மக்கள் கரோனா தொற்றால் அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தால் வேலை இழந்துள்ளனா். இதனால் வருமானமின்றி தவித்து வருகின்றனா். இந்த நிலையில் பெட்ரோல், டீசல் தொடா்ந்து உயா்ந்து, ரூ. 100-ஐ நெருங்கி வருகிறது. இதுமத்திய அரசின் மக்கள் விரோத போக்கை காட்டுகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயா்வு மட்டுமின்றி சமையல் எரிவாயுவின் விலை ஒரே ஆண்டில் ரூ. 220 அதிகரித்துள்ளது. சமையல் எண்ணெய் விலையும் ரூ. 200-ஐ நெருங்கி வருகிறது. அத்தியாவசியப் பொருள்களின் விலையும் தொடா்ந்து உயா்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, அத்தியவசியப்பொருள்களின் விலை உயா்வை தடுக்க மத்திய அரசு தவறியுள்ளது. இதனைக் கண்டித்து பொது முடக்கத்துக்கு பிறகு மாநில அளவில் தீவிர போராட்டத்தில் ஈடுபட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது என்றாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT