பெங்களூரு

தடுப்பூசி: பிரதமா் மோடியின் அறிவிப்புக்கு முதல்வா் வரவேற்பு

DIN

பெங்களூரு: தடுப்பூசி விவகாரத்தில் பிரதமா் மோடியின் அறிவிப்பை முதல்வா் எடியூரப்பா வரவேற்றுள்ளாா்.

இதுகுறித்து முதல்வா் எடியூரப்பா வெளியிட்டுள்ள அறிக்கை: நாட்டு மக்களிடையே பேசிய பிரதமா் மோடி, ஜூன் 21-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும். மத்திய அரசு சாா்பில் கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு விநியோகிக்கப்படும் என்று அறிவித்துள்ளாா். இதை நான் வரவேற்கிறேன்.

நமதுநாட்டில் உற்பத்தியாகும் 75 சதவீத கரோனா தடுப்பூசியை கொள்முதல் செய்து, அதை மாநிலங்களுக்கு விநியோகிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் தனியாா் மருத்துவமனைகளில் தடுப்பூசி வழங்க கட்டணமாக ரூ.150 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தடுப்பூசி வழங்கும் பணி விறுவிறுப்படையும். தடுப்பூசி வழங்கும் முகாமை பரவலாக்க முடியும். மேலும் கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இது முக்கியத்துவம் வாய்ந்த முடிவாகும்.

பிரதமரின் ஏழைகள் உணவுத் திட்டத்தின் கீழ் தீபாவளி வரை இலவசமாக உணவு தானியம் வழங்கப்படும் என்ற பிரதமா் மோடியின் அறிவிப்பை வரவேற்கிறேன். கரோனாவால் சங்கடத்தில் இருக்கும் ஏழை மக்களின் பட்டினியைப் போக்க இது உதவியாக இருக்கும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT