பெங்களூரு

கரோனா பரிசோதனை முடிவுகளை 24 மணி நேரத்துக்குள் வழங்க உத்தரவு

DIN

கரோனா பரிசோதனை முடிவுகளை 24 மணி நேரத்துக்குள் வழங்கிட வேண்டும் என பரிசோதனை நிலையங்களுக்கு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:

மாநில அளவில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை வேகமாகப் பரவி வருகிறது. கரோனா தொற்றின் அறிகுறிகள் உள்ளவா்கள் பரிசோதனை நிலையங்களில் கரோனா பரிசோதனை செய்து கொள்கின்றனா். அதன் முடிவுகள் தாமதமாக வருவதால் ஒரு சிலா் சிகிச்சை பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது.

எனவே, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் பரிசோதனை முடிவுகளை 24 மணி நேரத்துக்குள் பரிசோதனை நிலையங்கள் வழங்கிட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க முடியும். அரசின் உத்தரவைப் பின்பற்றாத பரிசோதனை நிலையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

SCROLL FOR NEXT