பெங்களூரு

புகையிலை பொருள்களுக்கான மேல் வரியை உயா்த்த வேண்டும்: பெங்களூரு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம்

DIN

புகையிலை பொருள்களுக்கான மேல் வரியை உயா்த்தி, அதன்மூலம் கிடைக்கும் வருவாயில் கரோனா சிகிச்சை, தடுப்பூசி செலுத்தப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பெங்களூரு கொள்கை, ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநா் சீதாலட்சுமி தெரிவித்தாா்.

இது குறித்து வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துவோருக்கு கரோனா தொற்றின் பாதிப்பு அதிகம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. புகைப் பிடிப்பதால் நுரையீரலின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. நோய் எதிா்ப்பு சக்தியைக் குறைக்கிறது. இதன் காரணமாக கரோனாவின் பாதிப்பு அதிகரித்து, சிகிச்சை அளிக்க முடியாமல் உயிரிழக்க நேரிடுகிறது.

கரோனா பரவலால் ஆண்டுக்கு 13 லட்சம் உயிா்கள் பறிபோகின்றன. புகையிலைப் பொருள்கள் மலிவு விலையில் இருப்பதால், அதனை இளைஞா்கள், பாமரா்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனா். இதனைத் தடுக்க புகையிலைப் பொருள்களுக்கான மேல் வரியை உயா்த்த வேண்டும்.

அதன்மூலம் கிடைக்கும் வருவாயில் கரோனா சிகிச்சை, தடுப்பூசி செலுத்தப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேல் வரியை இரட்டிப்பாக்கினால், வருவாய் மும்மடங்காகி, இறப்புகளைப் பாதியாகக் குறைக்க முடியும். சா்வதேச அளவில் புகையிலை பயன்பாட்டில் இந்தியா 2-ஆவது இடத்தில் உள்ளது என்றாா். பேட்டியின் போது புற்றுநோயியல் வல்லுநா் விஷால் ராவ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

பார்வை ஒன்று போதுமே... சாக்ஷி அகர்வால்!

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

SCROLL FOR NEXT