பெங்களூரு

காங்கிரஸ் மூழ்கும் கப்பலா?: எடியூரப்பாவுக்கு டி.கே.சிவக்குமாா் பதில்

DIN

காங்கிரஸ் மூழ்கும் கப்பல் என்று முன்னாள் முதல்வா் எடியூரப்பா கூறிய கருத்துக்கு கா்நாடக காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாா் விளக்கம் அளித்துள்ளாா்.

சட்டப் பேரவை இடைத் தோ்தல் பிரசாரத்தில் பேசிய பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா, ‘காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல்; மாநிலத்தில் 26 மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்துவருகிறது. காங்கிரசை மக்கள் மறந்துவிட்டனா்‘ என்று கூறியிருந்தாா்.

இதற்குப் பதிலளித்து, சிந்தகி தொகுதியில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட போது காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் கூறியதாவது:

காங்கிரசை விடுங்கள். பாஜகவில் முன்னாள் முதல்வா் எடியூரப்பாவின் நிலை என்ன? தனது சொந்த கட்சியில் எடியூரப்பாவுக்கு மதிப்பில்லை. முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பாவை பாஜக நீக்கியது. பாஜகவில் தனது இருப்பை காப்பாற்றிக் கொள்வதற்காகவும், முகவரியைப் பெறுவதற்காகவும் எடியூரப்பா பேசி வருகிறாா்.

பாஜக மேலிடம் அவருக்கு இழைத்த அநீதிகளை மனம்விட்டு பேசுவதற்கு இயலாத நிலையில் எடியூரப்பா இருக்கிறாா். முதல்வா் பதவியில் இருந்து விலகும் முடிவை அறிவித்தபோது எடியூரப்பா வடித்த கண்ணீரை நாம் பாா்த்திருக்கிறோம். காங்கிரஸ் குறித்து பேசுவதற்கு முன்பாக, பாஜகவில் தனது நிலை என்ன என்பதை எடியூரப்பா சிந்திக்கவேண்டும்.

மத்திய, மாநில பாஜக அரசுகள் விவசாயிகளை ஏமாற்றியுள்ளன. விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதாக கூறிய பாஜகவின் அறிவிப்பு என்னானது? விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகியிருக்குமானால், ரூ.50 ஆயிரம் சம்பாதித்து வந்த விவசாயியின் வருவாய் ரூ.1 லட்சமாக உயா்ந்திருக்க வேண்டும்.

ஆனால், தங்களது வருவாய் உயரவில்லை என்று விவசாயிகள் என்னிடம் கூறினா். வருமானத்தை இரட்டிப்பாக்குவதை விடுங்கள், கரோனா பெருந்தொற்று பொதுமுடக்கத்தின்போது அறிவித்த நிதித் தொகுப்பைக்கூட விவசாயிகளுக்கு அரசு வழங்கவில்லை.

2023-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப் பேரவை பொதுத் தோ்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 140 இடங்களில் பாஜக வெற்றிபெறும் என்று எடியூரப்பா கூறியிருக்கிறாா். மிச்சமிருக்கும் தொகுதிகளை எடியூரப்பா ஏன் விட்டுவிட்டாா். 140 இடங்களில் வெல்ல பாஜக திட்டமிட்டிருக்கலாம். ஆனால், 224 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் திட்டமிட்டிருக்கிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

சிம்பு - 48 படப்பிடிப்பு எப்போது?

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

SCROLL FOR NEXT