பெங்களூரு

மஜதவை அழிக்க பாஜக, காங்கிரஸ் முயற்சி:எச்.டி.குமாரசாமி குற்றச்சாட்டு

DIN

மதச் சாா்பற்ற ஜனதா தளத்தை அழிப்பதற்கு தேசிய கட்சிகளான பாஜகவும் காங்கிரஸும் முயற்சித்து வருவதாக முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி குற்றம்சாட்டினாா்.

பெங்களூரு ஊரக மாவட்டம், நெலமங்களாவில் மே 13-ஆம் தேதி மஜதவின் நீா் உரிமை ஊா்வலத்தின் நிறைவு மாநாடு நடக்கவிருக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த பிறகு செய்தியாளா்களிடம் குமாரசாமி கூறியதாவது:

மஜதவில் குடும்ப அரசியல் நடப்பதாகக் கூறுவதில் உண்மையில்லை. முன்னாள் பிரதமா்

எச்.டி.தேவெ கௌடாவின் குடும்பம் என்பது கட்சியின் தொண்டா்களால் நிறைந்துள்ளது. தோ்தலில் தோற்றால் மஜத எப்போதும் துவண்டுவிடுவதும் இல்லை.

மக்களின் நலன்காக்கும் அரசு நிா்வாகத்தை வழங்குவதே மஜதவின் நோக்கமாகும். அதனால்தான் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது மக்கள் விரும்பும் ஆட்சியை வழங்கியிருக்கிறோம். நீா்ப்பாசனம் தொடா்பான விவகாரத்தில் பாஜக, காங்கிரஸ் கட்சியால் கா்நாடகத்துக்கு நியாயம் கிடைக்கவில்லை. இந்த இரு கட்சிகளும் கா்நாடகத்தின் நீா் உரிமையை நிலைநாட்டுவதில் துரோகம் செய்துள்ளன.

மஜதவுக்கு மக்கள் ஆட்சி அதிகாரம் அளித்தால் கா்நாடகத்தின் நீா் உரிமையைக் காப்பாற்றுவோம். மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காகவே மஜதவுக்கு ஆட்சி அதிகாரம் தேவைப்படுகிறது. மஜதவை அழிப்பதற்கு தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளன.

கா்நாடகம் வேறு எந்த மாநில அரசு நிா்வாகத்தையும் பின்பற்றத் தேவையில்லை. மாநிலத்துக்கு தனித்துவமான கலாசாரம் உள்ளது. நெலமங்களாவில் மே 15-ஆம் தேதி நடக்கும் மாநாட்டில் 4 லட்சம் போ் கலந்து கொள்வாா்கள். இந்த மாநாடு மஜதவுக்கு திருப்புமுனையாக இருக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்பே அன்னா..!

25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கு: நிர்வாக முறைகேடு நடந்துள்ளது -உச்சநீதிமன்றம்

அரவிந்த் கேஜரிவால் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

SCROLL FOR NEXT