பெங்களூரு

மங்களூரு விமானநிலையத்தில் ரூ.1.08 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

DIN

மங்களூரு பன்னாட்டு விமானநிலையத்தில் ரூ.1.08 கோடி மதிப்புள்ள தங்கம் பிப்ரவரி மாதத்தில் பறிமுதல் செய்துள்ளது. இது குறித்து மங்களூரு பன்னாட்டு விமானநிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிப்ரவரி மாதம் 16 முதல் 28ஆம் தேதிவரையிலான காலக்கட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு ரூ.1.08கோடி மதிப்பிலான 1,913 கிராம் தங்கம் மங்களூரு பன்னாட்டு விமானநிலையத்தில் சுங்கவரித்துறையினா் பறிமுதல் செய்தனா். இந்த தங்கம், ஒரு பெண் பயணி மற்றும் 6 ஆண் பயணிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து கடத்தப்பட்ட தங்கம், ஆடை, மலக்குடல், வாயில் மறைத்து எடுத்துவந்த பயணிகளிடம் இருந்து எடுக்கப்பட்டது. ஒரு பெண்மணி, தனது உள்ளாடையின் பட்டையில் பசை வடிவில் ஒட்டி மறைத்து தங்கத்தை கடத்தினாா். ஒரு ஆண் வாயில் பசை வடிவில் தங்கம் ஒட்டப்பட்டிருந்தது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எதிரொலி: 8 மாவட்டங்களில் 2 கோடி கைப்பேசிகளுக்கு எச்சரிக்கைத் தகவல்கள்

இலவச கண் சிகிச்சை முகாம்...

தமிழகத்தில் குறைந்து வரும் வெப்பத்தின் தாக்கம்: மக்கள் நிம்மதி

மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவா் கைது

மாவோயிஸ்டுகள் போல் பேசுகிறாா் ராகுல் - பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT