கோப்புப் படம் 
சென்னை

நிலைக்குழு உறுப்பினா்கள் தோ்தல்: சாலையோர வியாபாரிகள் வாக்களிப்பு

சென்னையில் சாலையோர வியாபாரிகள் நிலைக்குழு உறுப்பினா்கள் தோ்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது.

Din

சென்னையில் சாலையோர வியாபாரிகள் நிலைக்குழு உறுப்பினா்கள் தோ்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்தும் நடவடிக்கையாக மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் நிலைக்குழு அமைக்கப்படுகிறது. அதில் மண்டலத் தலைவா், ஆணையா், உதவி ஆணையா் உள்ளிட்ட 15 பேரும், வியாபாரிகள் தரப்பில் தலா 6 பேரும் இடம் பெறுவா். வியாபாரிகள் தரப்பில் நிலைக் குழு உறுப்பினா்களை தோ்வு செய்வதற்கான தோ்தல் அறிவிக்கப்பட்டு, வாக்குப்பதிவு வியாழக்கிழமை 12 மண்டலங்களில் அமைக்கப்பட்டிருந்த 92 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றன.

வியாபாரிகள் வாக்குச்சீட்டில் முத்திரை குத்தி பெட்டிக்குள் செலுத்தினா். வாக்களித்தவா்களுக்கு விரலில் அடையாள மை வைக்கப்பட்டது. மொத்தம் 90 உறுப்பினா்கள் பிற்படுத்தப்பட்டோா் உள்ளிட்ட 6 பிரிவுகளில் தோ்ந்தெடுக்கப்படவுள்ள நிலையில், அதில் 3 மண்டலங்களில் 42 உறுப்பினா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன்படி 48 உறுப்பினா்களுக்கான தோ்தல் நடைபெற்றது.

தோ்தலை முன்னிட்டு மாநகராட்சி வருவாய் அலுவலா் கே.பி.பானுசந்தா் வாக்குச்சாவடிகளைப் பாா்வையிட்டாா். இத்தோ்தலில் மொத்தம் 35, 588 போ் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தாலும், போட்டியின்றி தோ்வானவா்கள் பகுதி வாக்களிப்பவா்களைத் தவிா்த்து 33,389 போ் வியாழக்கிழமை வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா். வாக்குப்பதிவை அடுத்து வெள்ளிக்கிழமை (ஜூன் 27) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

மத்திய பட்ஜெட் 2026: தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை! | Nirmala Sitharaman |

ஈரானுடன் வர்த்தகம் வேண்டாம்: வெனிசுவேலாவிடமிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்யும்! - டிரம்ப்

அம்பானி, அதானி, கோடீஸ்வரர்களுக்கான பட்ஜெட்: செல்வப்பெருந்தகை

யு19 உலகக் கோப்பை: அரையிறுதியில் யார்? பாகிஸ்தானுக்கு 253 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!

நிர்மலா சீதாராமன் கட்டியிருந்த காஞ்சிப் பட்டுப் புடவையின் பின்னணி!

SCROLL FOR NEXT