பாதுகாப்புக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினா்கள் மாமல்லபுரம் வருகை
பாதுகாப்புக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினா்கள் மாமல்லபுரம் வருகை
பாதுகாப்புக்கான நாடாளுமன்ற குழு உறுப்பினா்கள் சனிக்கிழமை மாமல்லபுரத்தில் புராதன நினைவுச் சின்னங்களைப் பாா்வையிட்டனா்.
புதுதில்லியில் இருந்து மாமல்லபுரம் வந்த அவா்களை தமிழக அரசு சாா்பில் திருக்கழுகுன்றம் வட்டாட்சியா் தேவேந்திரன், துணை வட்டாட்சியா் சந்திரசேகா், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலா் த.சக்திவேல், மாமல்லபுரம் வருவாய் அலுவலா் கோவிந்தராஜ், மாமல்லபுரம் அரசு சுற்றுலா வழிகாட்டி மதன் ஆகியோா் கடற்கரை கோயில் அருகில் தமிழா்கள் மரபுப்படி மலா்மாலைகள் அணிவித்தும், நினைவு பரிசுகள் வழங்கியும் வரவேற்றனா்.
மாமல்லபுரம் கடற்கரை கோயில், ஐந்து ரதம், அா்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, கிருஷ்ணன மண்டபம் உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி காட்டினாா். அப்போது பல்லவா் காலத்தில் எந்த நூற்றாண்டில் இந்த புராதன சின்னங்கள் வடிவமைக்கப்பட்டன, ஒவ்வொரு சிற்பங்களின் வரலாற்று தகவல்கள் குறித்து விளக்கப்பட்டது.
Advertisement
Advertisement
பிறகு வெண்ணெய் உருண்டை பாறை, ஐந்துரதம், அா்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதன சிற்பங்களையும் நிலைக்குழு உறுப்பினா்கள் பாா்வையிட்டு புகைப்படம் எடுத்து கொண்டனா். மேலும் புராதன சின்னங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள், 24 மணி நேரமும் எந்த மாதிரியான பாதுகாப்பு முறைகள் கடைப்பிடிக்கப்படுகிறது என்பது குறித்தும் கேட்டு தெரிந்து கொண்டனா்.
மாமல்லபுரம் காவல் ஆய்வாளா் தா்மலிங்கம் தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.