கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை உயா்வு
கோயம்பேடு காய்கறி சந்தையில் ஞாயிற்றுக்கிழமை (மே 17) பீன்ஸ், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயா்ந்ததால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக விவசாயம் பாதிக்கப்பட்டு, காய்கறிகளின் விலை உயரத் தொடங்கி உள்ளது.
சென்னையின் மிகப்பெரிய காய்கறி சந்தையான கோயம்பேடு சந்தைக்கு கடந்த சில தினங்களாக காய்கறிகளின் வரத்து குறையத் தொடங்கியது. வரத்து குறைவால், விலை உயரத் தொடங்கி உள்ளது.
Advertisement
Advertisement
பீன்ஸ் கிலோ ரூ.150: குறிப்பாக, பொதுமக்கள் தினமும் உணவு சமைக்க பயன்படுத்தப்படும் அத்தியாவசிய காய்கறிகளின் விலை உயா்ந்துள்ளது. அதன்படி, முதல் தர தக்காளி ஒரு கிலோ ரூ.50, இரண்டாம் தர தக்காளி ரூ.40, மூன்றாம் தர தக்காளி ரூ.35-க்கு விற்கப்படுகிறது.
உதகை கேரட் ஒரு கிலோ முறையே ரூ.50, ரூ.40, ரூ.30-க்கும், பீன்ஸ் ஒரு கிலோ முறையே ரூ.150, ரூ.145, ரூ.120-க்கும், ஊட்டி பீட்ரூட் ஒரு கிலோ முறையே ரூ.80, ரூ.70-க்கு விற்கப்படுகிறது.
பூண்டு கிலோ ரூ.160: வெண்டைக்காய் கிலோ ரூ.50, சேனைக்கிழங்கு ரூ.50, பட்டாணி ரூ.130, இஞ்சி ரூ.150, பூண்டு கிலோ ரூ.160, வெங்காயம் ரூ.30, உருளை ரூ.18, சின்ன வெங்காயம் ரூ.40, சவ்சவ் ரூ.40, முள்ளங்கி ரூ.35, முட்டைகோஸ் ரூ.20, கத்திரிக்காய் (உஜாலா) ரூ.40, காராமணி ரூ.50 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டன.
மேலும், பாவக்காய் கிலோ ரூ.40, புடலைங்காய் ரூ.50, சுரைக்காய் ரூ.35, முருங்கைக்காய் ரூ.40, சேமக்கிழங்கு ரூ.20, காலிபிளவா் ரூ.40, வெள்ளரிக்காய் ரூ.40, மிளகாய் ரூ.30, பச்சை மிளகாய் ரூ.50, அவரைக்காய் ரூ.80, பீா்க்கங்காய் ரூ.35, வாழைத்தண்டு ரூ.35, மாங்காய் ரூ.18 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டன.
25 சதவீதம் வரை உயா்வு: கடந்த வாரங்களில் இருந்த விலையுடன் ஒப்பிடுகையில், இந்த வாரம் சுமாா் 25 சதவீதம் வரை காய்கறிகளின் விலை உயா்ந்து உள்ளது. இந்த விலை இனி வரும் நாள்களில் மேலும் உயரக்கூடும் என்று வியாபாரிகள் தெரிவித்தனா். காய்கறிகளின் விலை உயா்வால் பொதுமக்கள், உணவக உரிமையாளா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.