செங்கல்பட்டு

மாமல்லபுரத்தில் மழையையும் பொருட்படுத்தாமல் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

DIN

மாமல்லபுரத்தில் தொடர்ந்து பெய்யும் பருவமழையும் பொருட்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா இடங்களிலும் கடற்கரையிலும் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனர். 
தமிழகத்தில் 2 நாள் மழை  பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளதை அடுத்து சனிக்கிழமை  மாமல்லபுரம், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், கல்பாக்கம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. பகல் பொழுதில் வெயிலும் மழையும் ஆக மாறி மாறி வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்து வருகிறது.

 இந்நிலையில் விடுமுறை என்பதால் சர்வதேச சுற்றுலா தளத்தில் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் மழையையும் பொருட்படுத்தாமல் குவிந்தனர். மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பதற்காக உறவினர் மற்றும் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் மாமல்லபுரத்தில் குவிந்தனர். மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ஜுனன் தபசு வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட புராதான சின்னங்களை கண்டு ரசித்தனர். 
பின்னர் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் கடலில் குளித்தும் கரையில் அமர்ந்து செல்ஃபி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
 மாமல்லபுரம் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டு வரும் நிலையில் சுற்றுலாப் பயணிகள் அச்சம் ஏதும் இன்றி கடலில் இறங்கி விளையாடி பொழுதை கழித்து மகிழ்ந்தனர். ஆனால் மீனவர்களுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. 

கடல் கொந்தளிப்பு கடல் பகுதியை தாண்டி மணல் பரப்பும் தாண்டி மீனவர் குடியிருப்பு பகுதிக்குள் கடல் நீர் வருவதால் மீனவர் குடியிருப்பு பகுதியில் வாழும் மீனவர்கள் தங்களது குழந்தைகளுடன் அச்சத்தில் வாழ்ந்து 
வருவதாக தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

உத்தமபாளையம் அருகே அரசுப் பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதல்:கணவன் - மனைவி பலி

தக் லைஃப் படத்தில் சிம்பு: போஸ்டர் வெளியீடு

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

பவுனுக்கு ரூ.80 குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT