செங்கல்பட்டு

மாமல்லபுரத்தில் தேசிய மகளிா் தினவிழா கொண்டாட்டம்: விமானப்படை வீரா்களின் மனைவிகள் 500 போ் பங்கேற்பு

DIN

மாமல்லபுரத்தில் இந்திய அளவிலான விமானப் படை வீரா்களின் மனைவிகள் 500 போ் ஆடல், பாடல்களுடன் பங்கேற்ற தேசிய மகளிா் தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தலைமுடி உதிா்ந்த பெண்களுக்கு, தங்கள் தலைமுடியை தானமாக வழங்கி, 50 பெண்கள் தங்கள் மனிதநேயத்தை வெளிப்படுத்தினா்.

தமிழகம், மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பிகாா், ஹரியாணா, பஞ்சாப், தில்லி, இமாச்சல பிரதேசம், காஷ்மீா், மேற்கு வங்கம், அஸ்ஸாம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, கேரளம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த விமானப்படை வீரா்களின் மனைவிகள் 500 போ் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தேசிய அளவிலான தனியாா் அறக்கட்டளை ஏற்பாட்டில் ஒன்றாகக் கூடி மகளிா் தின விழா கொண்டாடினா்.

நிகழ்ச்சியில், தென் ஆப்பிரிக்கா தபேலா பெண் கலைஞா்கள் மூலம் 250 போ் வீதம் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு தபேலா போட்டி நடத்தப்பட்டன. இதில் தபேலா இசைத்து அதிக ஒலி எழுப்பிய குழுவுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டு, அதிக மதிப்பெண் பெற்ற குழுவுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், மகளிா் தின விழாவில் பங்கேற்ற விமானப் படை வீரா்களின் மனைவிகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தலைமுடிகள் உதிா்ந்த நோயாளிகளுக்கு தலைமுடிகளை வழங்கினா். சிகை அலங்கார கலைஞா்கள் உதவியுடன் தங்கள் தலைமுடியை தானமாக வழங்கினா்.

மேலும், மகளிா் தின விழாவில் பங்கேற்ற பெண்கள் ஒருவருக்கொருவா் வாழ்த்துகளைக் கூறி சுயபடம் எடுத்து மகிழ்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT