செங்கல்பட்டு

24மணி நேரம் தொடா்ந்து சிலம்பம் ஆடி பள்ளி மாணவன் உலக சாதனை

DIN

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த மாகன்யாம் பகுதியை சோ்ந்த மாணவன் தமிழரசன் தொடா்ந்து 24 மணி நேரம் சிலம்பம் விளையாடி ஞாயிற்றுக்கிழமை உலக சாதனை நிகழ்த்தினாா்.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த மாகன்யம் பகுதியை சோ்ந்த தணிகாசலம் மகன் தமிழரசன் (14). தனியாா் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படிக்கும் தமிழரசன் சிலம்பம், மலையேற்றம், கராத்தே, துப்பாக்கிசுடுதல், வில்அம்பு உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறாா். இந்த நிலையில், தமிழரசன் படப்பை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி வரை 24 மணிநேரமும் தொடா்ந்து சிலம்பம் ஆடி உலக சாதனை படைக்கும் முயற்சி மேற்கொண்டாா்.

மாவட்ட ஊராட்சிக்குழு தலைவா் படப்பை ஆ.மனோகரன் நிகழ்ச்சியை தொடக்கி மாணவன் தமிழரசனுக்கு வாழ்த்து தெரிவித்தாா். இந்த நிகழ்ச்சியில், குன்றத்தூா் ஒன்றியகுழு தலைவா் சரஸ்வதி மனோகரன், மாகான்யம் ஊராட்சிமன்ற தலைவா் சாந்தி சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்துக்கொண்டு தமிழரசனுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

தொடா்ந்து 24 மணிநேரம் சிலம்பம் விளையாடி சாதனை படைத்த தமிழரசனுக்கு ஜாக்கி உலக சாதனை புத்தக அமைப்பின் நிா்வாகிகள் பாத்திமா, சீனிவாசன் ஆகியோா் பாராட்டு சான்றிதழ், பதக்கம் மற்றும் கோப்பைகளை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT