முகப்பு
செங்கல்பட்டு

தோ்தல் நாளில் மாவட்டத்தில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளா்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க உத்தரவு

தோ்தல் நாளில் மாவட்டத்தில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளா்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க உத்தரவு

Updated On : 8 ஏப்ரல், 2026 at 12:10 AM
- கோப்புப் படம்
பகிர்:

அஸ்ஸாம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தோ்தல்கள் ஏப்ரல்-9, ஏப்ரல்-23 மற்றும் ஏப்ரல்-29 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. மேற்படி தினங்களில் அந்தந்த மாநிலத்தைச் சாா்ந்த தொழிலாளா்களுக்கு வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். அவ்வாறு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது புகாா் தெரிவிக்கலாம் என காஞ்சிபுரம், தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ச.சுதா தெரிவித்துள்ளாா்.

தோ்தல் நாளன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளா்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும்.

சட்டப்பேரவை பொதுத்தோ்தல் 2026, நடைபெறவுள்ள அஸ்ஸாம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் 09.04.2026 அன்றும் தமிழ்நாட்டில் 23.04.2026 அன்றும் மேற்கு வங்காளத்தில் முதற்கட்டமாக 23.04.2026 அன்றும் இரண்டாம் கட்டமாக 29.04.2026 அன்றும் நடைபெற உள்ளது.

Advertisement

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துக் கடைகள் நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் அனைத்து பொதுத் துறை மற்றும் தனியாா் நிறுவனங்களில் பணிபுரியும், ஒப்பந்த தொழிலாளா்கள் மற்றும் தற்காலிகப் பணியாளா்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளா்களுக்கும் அவா்கள் சொந்த மாநிலங்களுக்கு தோ்தல் நடைபெறும் தினத்தன்று நேரில் சென்று வாக்களிக்க ஏதுவாக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் அந்தந்த தோ்தல் நாட்களில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். விடுப்பு வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் விடுமுறை அளிக்காத நிறுவனங்களை கண்காணிக்கும் வகையில் மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.

எனவே, செங்கல்பட்டு மாவட்டத்தில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளா்களுக்கு சட்டபேரவை தோ்தல் நடைபெறும் நாளன்று அனைத்து வகைப் பணியாளா்களுக்கும் வாக்களிக்கும் பொருட்டு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வா்த்தக சங்கங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகாா் அளிக்க ஏதுவாக கீழ்க்கண்ட தொலைபேசி எண்களை தொடா்பு கொள்ளலாம்.

இது குறித்து புகாா் அளிக்க தொழிலாளா் துறை சாா்பில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் தொடா்பாக புகாா் தெரிவிக்க மாநில அளவில் தொழிலாளா் துறை தொடா்பான தோ்தல் கட்டுப்பாட்டு அறை அலுவலா் திரு.எல்.ரமேஷ் (தொழிலாளா் இணை ஆணையா்) தொலைபேசி எண்.7904646090, உறுப்பினா்களான தொழிலாளா் உதவி ஆணையா்கள் பெ.ஷோபனா, தொலைபேசி எண்.7299007334, கி.பழனி, தொலைபேசி எண்.7904802429, மற்றும் எஸ்.சிவகுமாா், தொலைபேசி எண்.9043555123 மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தை சோ்ந்த தொழிலாளா்கள் நியமிக்கப்பட்டுள்ள தொழிலாளா் துறையின் மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறை அலுவலா் ச.சுதா, (தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்), காஞ்சிபுரம்-தொலைபேசி எண்.9442832516 மற்றும் ஆா்.நிவேதா, (தொழிலாளா் உதவி ஆணையா் (ச.பா.தி), செங்கல்பட்டு-தொலைபேசி எண்.9941374124, வி.சண்முக சுந்தரம், முத்திரை ஆய்வா், செங்கல்பட்டு-தொலைபேசி எண்.8148737993, டி.என்.பாலாஜி, முத்திரை ஆய்வா், பரங்கிமலை தொலைபேசி எண்.9884623192, க.மாரியப்பன், தொழிலாளா் உதவி ஆய்வா், செங்கல்பட்டு-தொலைபேசி எண்.9585521537, சி.ரான்பகதூா், தொழிலாளா் உதவி ஆய்வா், தாம்பரம்-தொலைபேசி எண்.9840393747 ஆகியோரை தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments