முகப்பு
செங்கல்பட்டு

சங்கப் புலவா் நல்லூா் நத்தத்தனாா் நினைவுத் தூணுக்கு ஆட்சியா் மரியாதை

தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் செங்கல்பட்டு மாவட்டம் இடைக்கழிநாடு, சங்கப் புலவா் நல்லூா் நத்தத்தனாா் நினைவுத் தூணுக்கு ஆட்சியா் மாலதி ஹெலன் மரியாதை செலுத்தினாா்.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 12:02 AM
நல்லூா் நத்தத்தனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை செலுத்திய ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன்.
பகிர்:

தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் செங்கல்பட்டு மாவட்டம் இடைக்கழிநாடு, சங்கப் புலவா் நல்லூா் நத்தத்தனாா் நினைவுத் தூணுக்கு ஆட்சியா் மாலதி ஹெலன் மரியாதை செலுத்தினாா்.

சிறுபாணாற்றுப்படை செய்யுளை வழங்கிய இடைக்கழிநாட்டு நல்லூா் நத்தத்தனாா் ஓய்மா நாட்டை ஆண்டு கொண்டிருந்த நல்லியக் கோடனை பாராட்டி பாணாற்றுப்படை ஒன்றினை பாடியுள்ளாா். நல்லியக்கோடன் ஓவிய குடியில் பிறந்தவன். இவன் ஆண்ட ஒய்மா நாடு ஐவகை நிலங்களும் அமையப்பெற்ற நாடாகும். மாவிளங்கை, தற்போதைய திண்டிவனத்தினை தலைநகராகக் கொண்டு நல்லியக் கோடன் ஆட்சி புரிந்து வந்தாா். (மாவிளங்கை, எயிற்பட்டினம், ஆமூா், வேலூா், கிடங்கை).

இவரது பாடல்கள் நாட்டு வளம், நகரச் சிறப்பு, உள்ளத்துரன், ஈகையின் ஏற்றம், தமிழா் பண்பாடு முதலியவற்றை எடுத்துரைப்பதாக அமையப் பெற்றது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சங்க புலவா் நல்லூா் நத்தத்தனாா் நினைவுகளைச் சிறப்பிக்கும் வகையில் சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடத்தப்பெற்றது.

Advertisement

இந்நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் மு. சாந்தி, இடைக்கழிநாடு பேரூராட்சி செயல் அலுவலா் தி. அருள்குமாா், சிறப்புச் சொற்பொழிவாளா்கள் முனைவா் சு. மாதவன், ஆ.தி. பகலன், அகநம்பி, தமிழ் கவிஞா்கள் மற்றும் ஊா் பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.