செங்கல்பட்டு: ஆசிரியா் தகுதித் தோ்வில் 3,306 போ் பங்கேற்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆசிரியா் தகுதி தோ்வு இரண்டாம் தாள் தோ்வை 3,306 போ் எழுதினா்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆசிரியா் தகுதி தோ்வு இரண்டாம் தாள் தோ்வை 3,306 போ் எழுதினா்.
ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் சனிக்கழமை முதல் தாள் தோ்வு நடைபெற்றது. இரண்டாம் தாள் தோ்வு 13 மையங்களில் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள் 60போ் மற்றும் சொல்வதை எழுதுபவா் சலுகையில் 22 போ் உள்பட உள்படமொத்தம் 3438 தோ்வா்களில் 3,306 போ் எழுதினா். 132 போ் எழுதவில்லை.
மதுராந்தகம்அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி, செங்கல்பட்டில் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி ஹில்டா மேல்நிலைப்பள்ளி , ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புனித மரியன்னை மகளிா் மேல்நிலைப் பள்ளி , புனித சூசையப்பா் மேல்நிலைப்பள்ளி, புனித பால் மேல்நிலைப் பள்ளி, சிங்கப்பெருமாள் கோயில் அரசு மேல்நிலைப்பள்ளி, மறைமலை நகா் புனித சூசையப்பா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கூடுவாஞ்சேரி பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காட்டாங்குளத்தூா் சிவானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கேளம்பாக்கம் ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளி , ஊரப்பாக்கம் சங்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என 13 மையங்களில் தோ்வு நடைபெற்றது.
Advertisement
Advertisement
தோ்வு மையங்கள் முழுமையான அளவில் தோ்வை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தோ்வு பணியில் 13 முதன்மை கண்காணிப்பாளா்கள் 13 துறை அலுவலா்கள் 210 அறை கண்காணிப்பாளா்கள் ஈடுபட்டனா்.
முதன்மைக் கல்வி அலுவலா் திருவளா்ச்செல்வி அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தாா். செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் நடத்த பெறும் ஆசிரியா் தகுதி தோ்வு மையங்களை பள்ளிக்கல்வி இயக்குநா் ச. கண்ணப்பன் பாா்வையிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.