முகப்பு
சென்னை

காலமானார் கவிஞர் பூவை அமுதன்

சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த கவிஞர் பூவை அமுதன் (85) உடல்நலக் குறைவு காரணமாக சனிக்கிழமை (மே 20) காலமானார்.

Updated On : 23 மே 2017, 3:22 am IST
பகிர்:

சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த கவிஞர் பூவை அமுதன் (85) உடல்நலக் குறைவு காரணமாக சனிக்கிழமை (மே 20) காலமானார்.
அவருக்கு மனைவி சரஸ்வதி, ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர். சிறுவர் இலக்கியம், மரபுக் கவிதை, நாவல்கள் என 125-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். அவரது பக்திப் பாடல்களைத் தாங்கி 75-க்கும் மேற்பட்ட ஒலிப் பேழைகள் வெளிவந்துள்ளன. ஜேசுதாஸ் உள்ளிட்ட பல பிரபல பாடகர்கள் அவரது பாடல்களைப் பாடியுள்ளனர்.
இவருடைய நூல்கள் பல்கலைக்கழகங்களில் துணைப் பாட நூல்களாக வைக்கப்பட்டுள்ளன. பலர் இவருடைய படைப்புகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.
திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ்.என்.சுரேந்தர், கவிஞர் பூவை அமுதனின் நெருங்கிய உறவினர். பேரன் விராஜ் திரைப்பட நடிகர்.
கவிஞர் பூவை அமுதனின் இறுதிச் சடங்கு ஞாயிற்றுக்கிழமை (மே 21) நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.