ஆர்யா நடிக்கும் அனந்தன் காடு! டீசர் வெளியீடு!
ஆர்யா நடிக்கும் அனந்தன் காடு படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
ஆர்யா நடிக்கும் அனந்தன் காடு படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
நடிகர் ஆர்யா நடிப்பில் இறுதியாக வெளியான மிஸ்டர். எக்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இவர் அடுத்ததாக பா. இரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தமிழ் - மலையாள என இரு மொழிகளில் உருவான புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார். ’அனந்தன் காடு’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஜியேன் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். கதை, திரைக்கதையை முரளி கோபி எழுதியுள்ளார். காந்தாரா புகழ் அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் நிகிலா விமல், ரெஜினா உள்பட பலர் நடித்துள்ளனர்.
அனந்தன் காடு திரைப்படம் வருகிற ஜூன் 25 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இதன் டீசர் இன்று வெளியாகியுள்ளது.
The teaser for the film Ananthan Kaadu starring Arya released
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.