FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பிரகாஷ் ராஜ் நடித்த ஃபாதர் திரைப்படத்தின் டீசர்!

ஃபாதர் திரைப்படத்தின் டீசர் வெளியானது...

பகிர்:

கும்குமப் பூவும் கொஞ்சுபுறாவும் படத்தின் இயக்குநர் ராஜா மோகன் இயக்கிய ஃபாதர் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் படத்தின் மூலம் , திரையுலகைத் திரும்பிப்பார்க்க வைத்த இயக்குநர் ராஜா மோகன் ஒரு தந்தையின் தியாகத்தை, பெருமையைப் பேசும் திரைப்படமாக ’ஃபாதர்’ படத்தை உருவாக்கி வருகிறார்.

டார்லிங் கிருஷ்ணா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, தந்தையாக நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார். ஒரு அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான அழகான உறவையும், அப்பாவின் பெருமையையும் அழுத்தமாக பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. ஆர்சி ஸ்டூடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆர். சந்துரு இந்தப் படத்தைப் பெரிய அளவில் தயாரித்து வருகிறார்.

Advertisement

Advertisement

இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் நகுல் அப்யங்கர் இசையில் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. விரைவில் இப்படம் தமிழ் உள்பட பான் இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இதன் டீசரை இன்று வெளியிட்டுள்ளனர். இதில் இடம்பெற்ற காட்சிகள், வசனங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

The teaser for the film Father, directed by Raja Mohan—who also directed Kumkumapuvum Konju Puravum as been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments