சிம்புதேவனின் நவோரியா முதல் பார்வை போஸ்டர்!
நவோரியா திரைப்பட போஸ்டர்...
இயக்குநர் சிம்புதேவன் இயக்கிய நவோரியா திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர் விமலை வைத்து சிம்புதேவன் நவோரியா என்கிற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படமும் அவரின் முந்தைய திரைப்படங்களைப் போல் வித்தியாசமான கதைக்களம் கொண்டதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதில், நடிகர்கள் ஆரி அர்ஜுன், பால சரவணன், தம்பி ராமைய்யா, அப்புக்குட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
டி. இமான் இசையமைப்பில் உருவாகும் இப்படம் டிசம்பர் வெளியீடாகத் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.