விஜயகுமாரின் அறிவு டீசர்!
அறிவு டீசர் வெளியானது...
நடிகர் விஜயகுமார் நடிப்பில் உருவான அறிவு திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
உறியடி திரைப்படம் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் கவனிக்கப்பட்டவர் விஜயகுமார். தொடர்ந்து, உறியடி - 2 மூலம் நல்ல நடிகர் என்கிற பெயரையும் பெற்றார்.
Advertisement
Advertisement
அதன்பின், சில ஆண்டுகள் கழித்து ஃபைட் கிளப் என்கிற திரைப்படத்தின் மூலம் ஆக்சன் நாயகனாக நடித்தார். ஆனால், அப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தற்போது, இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் அறிவு என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் டிச. 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
மலைகிராமங்களில் கல்வியைக் கொண்டு சேர்க்கும் வாத்தியாராக இப்படத்தில் விஜயகுமார் நடித்துள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில், இப்படத்தின் டீசரை இன்று வெளியிட்டுள்ளனர்.