டிஎஸ்பி இன்பராஜ்! சீன் அப்டேட்!
சீன் சூர்யா கிளிம்ஸ் குறித்து...
நடிகர் சூர்யா நடிப்பில் உருவான சீன் திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஜித்து மாதவன் நடிகர் சூர்யா கூட்டணியில் உருவான சீன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக வருகிற நவ. 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது. நஸ்ரியா, நஸ்லன் உள்பட பிரபலங்கள் நடித்திருப்பதால் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
மேலும், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா துபையில் இன்று நடைபெற உள்ளதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படத்திற்கான சூர்யாவின் கிளிம்ஸ் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், டிஎஸ்பி இன்பராஜ் என்கிற கதாபாத்திரத்தில் சூர்யா நீண்ட காலம் கழித்து காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளதால் அவரது ரசிகர்களிடம் ஆவலைத் தூண்டியுள்ளது.
A new update of the movie Scene starring actor Suriya has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.