ஓ.ம் கால அளவு இவ்வளவு நேரமா?
ஓ.ம் திரைப்படத்தின் கால அளவு குறித்து...
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான ஓ.ம் திரைப்படத்தின் சென்சார் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்கும் 55 ஆவது படம் ஓ.ம். இந்தப் படத்தை அமரன் திரைப்பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இதனைத் தனுஷின் வன்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன.
Advertisement
Advertisement
இந்தப் படத்தில் நடிகர்கள் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நஸ்ரூதின் ஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளதால், படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
அண்மையில், இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றிருந்த நிலையில், ஓ.ம் திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் இப்படம் 2.59 மணி நேரம் ஓடக்கூடிய கால அளவைக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.