கருணாநிதி பிறந்த நாள்: தலைவர்கள் மரியாதை! இன்றைய செய்திகள் ஜூன் 3 - நேரலை!
முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள இணைந்திருங்கள்.
சட்டத்துறையில் முதல் பெண் செயலர்! ப. சுமதி நியமனம்
சட்டத் துறையின் செயலாளராக கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்த சி.ஜார்ஜ் அலெக்சாண்டர் அரசு பணியிலிருந்து மே 31 ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றார்.
அவரது ஓய்வைத் தொடர்ந்து, மாநில சட்ட ஆணையத்தின் முழுநேர உறுப்பினர் செயலாளராக பணியாற்றி வந்த ப. சுமதி, ஜூன் 2 ஆம் தேதி முதல் சட்டத் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து
கர்நாடகத்தில் பள்ளி முதல் முதுகலை மாணவர்கள் வரை அனைத்து மாணவர்களும் கட்டணமின்றி பயணிக்கலாம் என முதல்வர் டி.கே. சிவகுமார் இன்று (ஜூன் 3) தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
கர்நாடக முதல்வராக டி.கே. சிவகுமார் இன்று (ஜூன் 3) பதவியேற்றுக்கொண்ட பிறகு நடந்த முதல் அமைச்சரவைக் கூடத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அணு ஆயுத நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டிரம்ப்
அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (ஜூன் 3) தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றமான சூழல் சீராகும்போது, அந்நாட்டின் உச்ச தலைவரான மோஜ்தபா கமேனியை சந்திக்க திட்டம் இருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸுக்கு மாநிலங்களவை சீட் : முதல்வர் விஜய்
காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்குவதாக முதல்வர் சி. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
முதல்வர் விஜய்யை சந்தித்து காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கோரிக்கை வைத்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸுக்கு வழங்குவதாக விஜய் தெரிவித்துள்ளார்.
ஈரான் தாக்குதல்
ஈரான் நடத்திய வான்வெளித் தாக்குதாலில் குவைத் சர்சதேச விமான நிலையம் கடுமையாக சேதமடைந்துள்ளது.
நூறு சாமி படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
சசி - விஜய் ஆண்டனி கூட்டணியில் உருவாகியுள்ள நூறு சாமி படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா... மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!
மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம். நோய்த்தொற்று நேரங்களில் பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும், அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக அமைச்சரவை
கர்நாடகத்தில் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ள 14 பேரின் பட்டியலை ஆளுநர் மாளிகை புதன்கிழமை வெளியிட்டுள்ளது.
கூடுதலாக 12.5 % வரி
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு கூடுதலாக 12.5 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
குமரி மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட்!
தில்லி தீ விபத்து! பலர் மாடியில் இருந்து குதித்தனர்! - என்ன நடந்தது?
கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் மு. கருணாநிதியின் பிறந்தநாளுக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக புதிய டிஜிபி பொறுப்பேற்பு!
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளுக்கு ராகுல் காந்தி வாழ்த்து!
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளுக்கு, காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கருணாநிதி பிறந்த நாள்: அரசு சார்பில் அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை!
தில்லி உணவகத்தில் தீ விபத்து: 10 பேர் பலி; மேலும் சிலர் கவலைக்கிடம்!
பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி!
இந்திய பங்குச்சந்தைகள் இன்று(ஜூன் 3) கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன.
சிறைத்துறை டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
முன்னாள் முதல்வர், மறைந்த கருணாநிதியின் 103 -ஆவது பிறந்த நாளையொட்டி புதன்கிழமை (ஜூன் 3) அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சிறைத்துறை டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்!
தொடர்ந்து 3-வது நாளாக ஒரே விலையில் தங்கம்! வெள்ளி விலையிலும் மாற்றமில்லை!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.