முகப்பு
தமிழ்நாடு

‘விசில் சத்தம் மேலும் ஒலிக்கட்டும்’... தோனிக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனிக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளதைப் பற்றி...

Updated On : 7 ஜூலை 2026, 3:47 pm IST
பகிர்:

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனிக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான மகேந்திர சிங் தோனி தனது பிறந்த நாளை இன்று (ஜூலை 7) கொண்டாடுகிறார். இதையொட்டி, அவரின் கோடிக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முதல்வர் விஜய் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தோனிக்கு வாழ்த்துப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

அந்தப் பதிவில், “உங்கள் பெயரை எதிரொலிக்கும் ஒவ்வொரு விசில் சத்தம் முதல், நீங்கள் ஊக்கமளித்த எண்ணிலடங்கா இதயங்கள் வரை, உங்கள் கிரிக்கெட் பயணம் தமிழ்நாட்டின் விளையாட்டுணர்வில் அன்புக்குரிய பகுதியாக மாறிவிட்டது!

நமது ‘கேப்டன் கூல்’ மகேந்திர சிங் தோனிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! உங்களின் கிரிக்கெட் சாதனைகள், தலைமைப்பண்பு மற்றும் எளிமை குணம் ஆகியவை பல தலைமுறையினருக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கின்றன.

உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் இன்னும் பல ஆண்டுகள் வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன். உங்களுக்கான விசில் சத்தம் மேலும் மேலும் ஒலிக்கட்டும்!” எனக் பதிவிட்டுள்ளார்.

summary

Chief Minister Vijay has extended birthday wishes to former Indian team captain M.S. Dhoni.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments