முகப்பு
சென்னை

தாம்பரத்தில் திமுகவினர் மறியல்

தாம்பரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தின்போது சாலை மறியலில் ஈடுபட்ட சுமார் 500 பேர் கைதாயினர்.

Updated On : 6 ஏப்ரல் 2018, 4:19 am IST
பகிர்:

தாம்பரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தின்போது சாலை மறியலில் ஈடுபட்ட சுமார் 500 பேர் கைதாயினர்.
தாம்பரம் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் ரூபி மனோகரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் அருள் பிரகாசம், மனிதநேய மக்கள் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் யாக்கூப் உள்ளிட்ட 500 பேர் கைது கைதாகி மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
குரோம்பேட்டையில் பல்லாவரம் சட்டப் பேரவை உறுப்பினர் இ.கருணாநிதி தலைமையில் நடைபெற்ற சாலை மறியலில் 300 பேர் கைதாகி விடுதலையாயினர். ஒரு சில இடங்களில் திறந்திருந்த கடைகளை மூட சிலர் கட்டாயப்படுத்தினர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments